வெளிநாட்டு வணிகம்
ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்
முகமன் :
ஒருநாடு முன்னேறிய நாடாக தன்னைத்தானே மர்ற்றிக்கொள்கிற செயல்திறன் அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பினை பொறுத்தே அமைகிறது. இந்த நூற்றாண்டின் துவக்கமுதல் வளரும் நாடுகளின் வரிசையில் முன்னிற்கும் நமது இந்திய துணைகண்டம் மிளிரத்துவங்கியிருக்கிறது என்பதில் துளியும் ஐயமில்லை. இந்த முனைப்பின் செயல்திறன் யாரிடம் இருந்து துவங்குகிறது என்ற வினாவிற்கு கிடைக்கின்ற ஒரே பதில் மக்களாகிய நமது கரங்களிலிருந்துதான் எனச்சொன்னால அது மிகையல்ல ! பலவீனத்தால் பலவீனத்தை பழுதுபர்ர்க்கிற உணர்வு நமது உள்ளங்களில் கருவுறும் போது நமது மண்ணின் பலம் செரிவூட்டப்படுகிறது என்பது நிதர்சன உண்மை,